வீசிய சூறைக்காற்றில் பறந்த வீட்டின் மேற்கூரைகள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2023-05-31 05:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வீசிய சூறைக்காற்றில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. அங்குள்ள, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 928 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 760 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென அங்கு வீசிய சூறைக்காற்றில், சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இதனை கண்டு அச்சம் அடைந்த முகாம் தமிழர்கள், தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்