அசைவத்திற்கு குட்-பை, சைவப் பிரியராக மாறிய சிங்கம்..! ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் பார்வையாளர்கள்
காட்டு ராஜாவாக அழைக்கப்படும் சிங்கம், இலை தழைகளை உண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஒரு சுவாரஸ்ய தொகுப்பை காணலாம்..
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது ஊர் அறிந்த பழமொழி... இது சிங்கத்திற்கும் பொருந்தும்...
மான்கள், காட்டெருமைகளை ஓட ஓட விரட்டி, அடித்து அதனை இரையாக்கி கொள்ளும் சிங்கங்கள்...
இதையெல்லாம் டிஸ்கவரி, animal planet போன்ற சேனல்களில் பார்த்து வியந்த நமக்கு, ஆச்சரியமளிக்கும் வகையில் புது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆம், வீடியோவில் மரக்கிளையை வளைத்து, அதிலிருக்கும் இலை, தழைகளை சிங்கம் ருசித்து சாப்பிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தீவிர அசைவப் பிரியரான சிங்கங்கள், pure vegetarian மாறிவிட்டதா என்ற கேள்வியுடன் பலரும் பகிரும் வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வீடியோவை பகிர்ந்திருக்கும் வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, சிங்கம் இலைகளை உண்ணும் காட்சிகள் ஆச்சம் அளித்தாலும்... இது சில நேரங்களில் அரங்கேறும் சம்பவமே என தெரிவித்துள்ளார். சிங்கங்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும் போதும், தண்ணீர் சத்து குறைந்து தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் போதும் அவை இலைகளை சாப்பிடும் என சொல்கிறார்.
சிங்கங்கள் மட்டுமல்ல புலிகள், சிறுத்தைகள், சிறுத்தைப் புலிகள், சீட்டாக்கள் கூட புற்கள், இலை தழைகளை உணவாக சாப்பிடும்
என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வீடியோவை பார்க்கும் பலரும்... இது என்னடா சிங்கத்திற்கு வந்த சோதனை... இவையெல்லாம் எப்படி இப்படி மாறிவிட்டது என கேலியான கேள்விகளுடன் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்...