நோன்புக்காக சம்சா தயாரிக்கும் பணியின் போது திடீரென வீட்டிற்குள் புகுந்து வியாபாரியை சரமாரியாக வெட்டித்தள்ளிய கும்பல்
- கடலூரில் வியாபாரி ஒருவர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பச்சையாங்குப்பம் சின்ன தைக்கால் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித். சம்சா வியாபாரியான இவர், சம்பவத்தன்று ராம்ஜானுக்கு நோன்பு இருப்பவர்களுக்காக சம்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- அப்போது, திடீரென வீட்டினுள் புகுந்த கும்பல் நூருல்லா சாகித்தையும், அவரது தந்தையையும் சரமாரியாக வெட்டி தப்பியோடியது.
- இதில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு நூருல்லா சாகித் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கொலைக்கான காரணத்தையும், மர்மகும்பல்களையும் தேடி வருகின்றனர்.