இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானை ஆண்டு துபாயில் கண் மூடிய முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப்

Update: 2023-02-05 12:13 GMT

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப் காலமான நிலையில், அவரைப் பற்றிய முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்...

ஆகஸ்ட் 11, 1943 இல் டெல்லியில் பிறந்தார் முஷாரப். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, பிரிவினையின் போது முஷாரஃபின் குடும்பம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு இடம் பெயர்ந்தது.

கராச்சியில் உள்ள செயின்ட் பேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற அவர், 1964 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்தார்.

1965 ஆம் ஆண்டில் இந்தோ-பாகிஸ்தான் போரில் 2வது லெப்டினெண்டாக பணியாற்றினார். 1980களில் ஒரு பீரங்கி படைப்பிரிவை அவர் வழிநடத்தினார்.

1990களில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற அவர், தொடர்ந்து துணை ராணுவ செயலாளராகவும், இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

1999-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி அதிபரானார் முஷாரப்.

பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாயில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார்.

2001-ல் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்