மசூதியில் நடந்த திருவிழாவில், யானை மிரண்டதால் பரபரப்பு
கேரள மாநிலம் திரு ஊரில் மசூதி திருவிழாவுக்கு இடையே யானை மிரண்டதால் பரபரப்பு- 21 பேர் காயம் தும்பிக்கையால் ஒருவரை தூக்கி வீசியது
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட திரூர் பகுதியில் அமைந்துள்ள மசூதி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திரு விழாவின் ஒரு பகுதியாக பத்து யானைகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த யானைகளில் ஒன்றான பாக்கத்து ஸ்ரீ குட்டன் என்ற யானை திடீரென மிரண்டு ஓடியது. அப்போது ஒருவரை தும்பிக்கையால் சுழற்றி தூக்கி வீசியது. இதனால் அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலறி அடித்து ஓடினர் இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில் யானையால் தூக்கி வீசப்பட்டவர் படுகாயம் அடைந்த நிலையில் கோட்டக்கல் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரல் சிகிச்சை பிரிவில் உள்ளார் இந்த யானை மிரண்டதால் ஏனைய யானைகள் மிரண்டு ஓடாமல் இருக்க பாகன்கள் சாதுரியமாக அவற்றை அப்புறப்படுத்தினர் மிரண்டு ஓடிய ஸ்ரீ குட்டன் யானைப்பாகனால் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மசூதி திருவிழாவில் யானை மிரண்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது