சிறுமியை விரட்டி விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள் - அலறல் சத்தம்.. நடுங்கவிடும் சிசிடிவி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது. எவ்லா எனும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, தெருநாய்கள் திடீரென சூழ்ந்து கொண்டு விரட்டி விரட்டி கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டி சிறுமியை மீட்டனர். உடல் முழுவதும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.