2வது நாளாக சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை - ஆறாக மாறிய சாலை

Update: 2023-06-20 02:43 GMT

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இரண்டாவது நாளாக இடி, மின்னலுடன் மழை பெய்தது.

வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், அண்ணா சாலை, நந்தனம், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்