`மதுரை போராட்டம்' மொத்தமாக திரண்ட மக்கள் - திக்கு முக்காடும் மதுரை சாலைகள்

Update: 2025-01-07 13:34 GMT

மேலூரில் இருந்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில், சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணியாக வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், மதுரை தமுக்கம் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளோடு, பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கைக்கோர்த்தனர். இதனை அடுத்து, 2 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில், சுமார் 2 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. பின்னர், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். எனினும், வரும் 21ஆம் தேதி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு விவசாயிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்