``நம் இடத்தை ஜப்பான் பிடித்துவிட்டது... குழந்தைகளுக்கு கூட பாரக்ஸ் தருகிறோம்..'' - ஆளுநர் ரவி
குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் தான் சிறந்தது என்றும், ஆனால் அதை மறந்து விட்டு, பாரக்ஸ் எனப்படும் செயற்கை உணவு முறையை கொடுக்கத் தொடங்கி விட்டார்கள் என்று, ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஆளுநர் உள்ள மாளிகையில், போஷன் உத்சவ் என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணாக்கர்கள் ஏராளனமானோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் மத்தியில் பேசிய
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு காலத்தில் அரிசி உற்பத்தியில் நாம் முதலிடத்தில் இருந்தோம், இப்போது அதை ஜப்பான் பிடித்து விட்டார்கள் என தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில், பல வகையான உணவு பொருட்கள் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், குழந்தைக்கு கூட, பாரக்ஸ் எனப்படும் செயற்கை உணவு முறையை கொடுக்கத் தொடங்கி விட்டார்கள் என கூறினார்.