ஐபிஎல் டிக்கெட்டில் ஏமாந்த ரசிகர்கள்... - "கொஞ்சம் உஷாரா இருந்து இருக்கலாம்"

Update: 2023-05-25 14:52 GMT

ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை-லக்னோ அணிகளுக்கு இடையே நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளுக்கான, டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்றதாக எழுந்த புகாரில், சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 23 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்