பிரபல டிவி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை..

Update: 2023-05-25 14:43 GMT

சென்னை வளசரவாக்கத்தில், குடும்பத் தகராறில், தொலைக்காட்சி தொடர் இயக்குனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

வளசரவாக்கம் அன்பு நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் நாகரத்தினம் தொலைக்காட்சி தொடர் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. இந்த தம்பதிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தொழிலில் முதலீடு செய்வது குறித்து தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த பத்மாவதி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் நாகரத்தினம், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்