திராவிட மண்ணில் இன்றும் குழந்தை தொழிலாளர் என்னும் கொடுமை - 3 மாதங்களுக்கு வெறும் 7 ஆயிரம்..

Update: 2023-07-20 12:02 GMT

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு கூடுதல் செயலாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது... இதையடுத்து அதிகாரிகள் சென்னை சவுகார்பேட்டை ரெட்டி ராமன் தெருவில் உள்ள நகை பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது குடோனில் பணியாற்றி வந்த 7 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 12 மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 3 மாதங்களுக்கு 1 முறை 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடம், பொதுக்கழிப்பறை சுகாதாரம் இன்றி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.https://youtu.be/4EWsKvhdE5A

Tags:    

மேலும் செய்திகள்