ஆற்றின் வெள்ளப்பெருக்கால்... 8-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு... ஊர் மக்கள் கடும் அவதி

Update: 2022-08-12 06:50 GMT

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கரையோர கிராம மக்களுக்கு 8 வது நாளாக போக்குவரத்து பாதிப்பு

பள்ளி செல்லும் குழந்தைகளை படகுமூலம் அழைத்துவர பெற்றோர்கள் கோரிக்கை* மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியே 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல் படுகை, முதலை மேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது, கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்கு உணவு குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது, கால்நடைகளுக்கு தீவனம் உள்ளிட்ட உணவு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டுப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை 8 வது நாளாக படகுமூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் பொதுமக்கள் தாங்களாவே தண்ணீரில் கரையை வந்து அடைந்து வருகின்றனர் இந்நிலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் இடுப்பளவு நீரில்நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்,பள்ளிச்செல்லும் மாணவர்களை படகு மூலம் அழைத்து கரையில் விட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்