"மொபைலில் எக்காரணம் கொண்டும் அதை மட்டும் தொட்றாதீங்க" - தமிழக மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

Update: 2023-06-07 07:31 GMT
  • மக்களை சமூக வலைதளத்தின் மூலம் தொடர்புகொண்டு அவர்களை ஏமாற்றுவது தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள சைபர் கிரைம் போலீசார்....
  • மோசடி செய்பவர்கள் வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் எஸ்எம்எஸ் அல்லது விளம்பரங்கள் மூலம் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்
  • எனவே வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரும் மெஸேஜ்களுக்கு பதிலளிக்கவோ, லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம் என வலியறுத்தியுள்ளனர்.
  • மேலும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ள போலீசார்.....
  • சமீபகாலமாக இந்த மோசடி தொடர்பாக பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பலர் தொடர்ந்து மோசடி நபர்களால் ஏமாற்றப்படுவதாகவும், எனவே மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்
  • சைபர் குற்றங்கள் தொடர்பாக, "24 மணி நேரத்திற்குள்" ஹெல்ப்லைன் எண் 1930 ஐ தொடர்பு கொண்டு புகார் அளிப்பதன் மூலம், மோசடி செய்தவர் பணத்தை எடுப்பதற்கு முன், அதை மீட்டு திரும்பப் பெற முடியும் என கூறியுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்