"அடுத்த 2 நாட்கள் இங்கு செல்லாதீர்கள்" - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

Update: 2023-07-26 10:57 GMT

நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. சென்னை மாநகரை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த இரு தினங்கள் மீனவர்கள் அரபிக்கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்