ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சை பதிவு - எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-11-26 01:59 GMT

ஐயப்பன் கோயில் குறித்து முகநூலில் பதிவிட்ட வழக்கில் பேராசிரியர் சுந்தரவல்லிக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பம்பை நதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஐயப்ப பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் சுந்தரவல்லி தமது முகநூல் பக்கத்தில், ஐயப்பன் கோயில் குறித்தும், சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராக பேராசிரியர் சுந்தரவல்லி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம், பேராசிரியர் சுந்தரவல்லிக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபாரதம் விதித்தது.

Tags:    

மேலும் செய்திகள்