மருத்துவமனைக்கு வந்த இறந்த உடல் - பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு

Update: 2022-12-21 04:53 GMT

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலை கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேல் என்பவர் மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்ததோடு, உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். ஆனால் இறந்தவரின் உறவினர்களோ, பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனவும், உடலை திரும்ப ஒப்படைக்குமாறும் கூறி மருத்துவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்