அதி தீவிரமாக வலுவடைந்தது மோக்கா புயல்.. 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும்..
தென்கிழக்கை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது "மோக்கா" புயல்...போர்ட் பிளேயருக்கு மேற்கு - வடமேற்கில் மையம் கொண்டுள்ள இந்த புயலானது, வடகிழக்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை வருகிற14ம் தேதி கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.