"பாட வாய்ப்பு கொடுத்த விஜயகாந்துக்கு நன்றி" மனம் உருகி பேசிய இசையமைப்பாளர் தேவா | Madurai
மதுரை ஒத்தக்கடையில் ஜனவரி 18 ஆம் தேதி இசையமைப்பாளர் தேவா, பிரமாண்ட இசைக் கச்சேரியை நடத்துகிறார். கச்சேரி வெற்றிபெற வேண்டி மீனாட்சி அம்மன் கோயிலில் தேவா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், வாராரு, வாராரு அழகர் வாராரு பாடலை மதுரை மண்ணில் பாட இருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். இதுவரையில் 400 படங்களுக்கு இசையமைத்து உள்ளதாக தெரிவித்தவர், ஏழு திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளதாக தெரிவித்தார்.