தனியார் பள்ளிகளில் நடக்கும் கொடுமை..! ஒரே அறிக்கையால் அதிரடி காட்டிய மாவட்ட கல்வி அலுவலர்... அதிர்ச்சியில் நிர்வாகிகள்

Update: 2024-12-24 12:39 GMT

பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாகவும், ஆசிரியர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாகவும், அவர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்வு பல தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இது ஒரு சில அரசு பள்ளிகளிலும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும் என்று புகார்கள் பெறப்பட்டுள்ளதால், புகார் மீது நடவடிக்கை எடுக்க இந்த சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சிலரின் நம்பிக்கையை இந்த உத்தரவு சிதைக்கும் விதமாக இருப்பதாக சில இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்