"தமிழகம் - ஜார்க்கண்ட் இடையே நல்லுறவை ஏற்படுத்தி.. தமிழர்கள் பெருமையை உலகிற்கு உணர்த்துவேன்" - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

Update: 2023-02-17 13:59 GMT
  • ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவது தான் தனது குறிக்கோள் என, சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
  • ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி., ராதாகிருஷ்ணன் நாளை பதவி ஏற்க உள்ளார்.
  • இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஞ்சி புறப்பட்டு சென்றார்.
  • அப்போது தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தமிழர்கள் பெருமையை உலகம் உணர்கின்ற வகையில் செயல்படுவேன் என்றார்.
  • ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்ற பின், தமிழகம் - ஜார்க்கண்ட் இடையே நல்லுறவை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என, உறுதியளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்