பிரதமர் மோடி குறித்த கார்கேவின் சர்ச்சை பேச்சு - கொதித்தெழுந்த பாஜகவினர்
கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, பிரதமர் மோடியின் சிந்தனையும், கொள்கையும் மிகவும் மோசமாக உள்ளது என்றார். பிரதமர் மோடியை விஷ நாகம் என வசைபாடிய கார்கே, அவர் கக்கும் விஷம் பட்டாலே இறந்துவிடுவீர்கள் என்றார். மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கார்கேவின் பேச்சுக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார். பேச்சு சர்ச்சையான நிலையில், பிரதமர் மோடியை தான் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசவில்லை என கார்கே விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடியை குறிப்பிடவில்லை, பாஜக கொள்கையையே விஷநாகம் என குறிப்பிட்டேன் என கார்கே கூறியிருக்கிறார். ஏற்கனவே கர்நாடகாவில் பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதுறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்தான் தண்டனை பெற்று ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்தார். இப்போது கார்கே பேச்சும் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.