காண்டக்ட் லென்ஸ் போட்டு இரவில் தூக்கம்... கண் திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணி.! பரிதமாக பார்வையை இழந்த இளைஞர்
- காண் பார்வை இழப்பு... ஏதோ வயதானவர்களுக்கு வரும் பாதிப்பாக இருந்தது. ஆனால் இப்போது சிறு குழந்தை களுக்கும் இந்த பாதிப்பு இருப்பது பெரும் அவலமாக இருக்கிறது. கரண்ட் வந்தது கண்ணை கெடுத்தது என்ற கூற்று செல்போன் வந்தது கண்ணை பறித்தது என்றாகி விட்டது.
- மெல்ல பார்வையை மங்க செய்யும் செல்போன், மூக்கு கண்ணாடி போடும் சுழலுக்குள் தள்ளுகிறது.
- அப்படி பார்வை குறைபாடு உள்ளவர்கள் பலர் முக அழகுக்காக காண்டாக்ட் லென்ஸ்-ஐ தேர்வு செய்கிறார்கள். மிக தூய்மையாக பராமரித்து, பயன்படுத்தும் காண்டாக்ட் லென்சை கவனமின்றி பயன்படுத்தும் போதும் பார்வைக்கு வேட்டு வைக்கிறது.
- அப்படி அமெரிக்காவின் புளோரிடாவில் தூங்கும் போது காண்டாக்ட் லென்சை போட்டுக்கொண்டு தூங்குவதை வழக்கமாகக்கொண்ட 21 வயது இளைஞ்ருக்கு கண் பார்வை பறி போயிருக்கிறது.
- கண்களில் நீர் வருவது, கண் சிவப்பது என இருந்த நிலையில் கருப்பு, சாம்பல் நிறங்களில் கண்கள் மாறியதும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
- அங்கு விழித்திரை நரம்புகள் பாதிப்பால் அவருக்கு பார்வை பறிபோய்விட்டதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. இதுகுறித்து கண் மருத்துவர் கலா தேவியிடம் பேசுகையில், சுத்தம் செய்யாமல், முறையாக பயன்படுத்தாத போது கண் திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணியான அகந்தமோபா கெராடிடிஸ் பரவும் என எச்சரிக்கிறார்....