ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலட், அம்மாநிலத்தில் மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துவோருக்கு, மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் நுகர்வோர் 100 யூனிட் மின்சாரத்திற்கும் அதிகமாக பயன்படுத்தியிருந்தால், முதல் 100 யூனிட்டிற்கு மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அசோக் கேலட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.