கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே, கடையின் முன் மது குடிப்பதை தட்டிக் கேட்ட அதன் உரிமையாளரை, கும்பல் ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதியங்குளங்கரா பகுதியை சேர்ந்த சியாம் என்பவரின் கடைக்கு முன்னே கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்த கும்பல் மது குடித்ததால், அதனை சியாம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அக்கும்பல் சியாமையும், கடையில் பணிபுரியும் ஊழியரையும் தாக்கியுள்ளது. மேலும், வீட்டிற்கு செல்லும்போதும் சியாமை வழிமறித்து அக்கும்பல் தாக்கியுள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.