மேக்அப் போடுவது போல் வந்து பர்ஸை பேக்கப் செய்த லேடி... சிசிடிவியில் பதிவான காட்சி - போலீசார் வலை வீச்சு
- சென்னை குன்றத்தூரில், அழகு நிலையத்திற்கு வந்து அழகாக பேசி, பணப்பையை அபேஸ் செய்த பெண்ணின் சிசிடிவி வெளியாகியுள்ளது.
- அஸ்வினி என்பவரது அழகு நிலைய கடைக்கு வந்த பெண் ஒருவர், ஃபேசியல் செய்துள்ளார்.
- பின்னர் அவர் சென்ற சிறிது நேரத்தில், 15 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த பணப்பை மாயமானதைக் கண்டு அஸ்வினி அதிர்ச்சி அடைந்தார்.
- எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அழகு நிலையத்திற்கு வந்த பெண் பணப்பையை எடுத்துச் சென்றது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது.
- இது குறித்த புகாரின் பேரில், அந்தப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.