வீடு திரும்பிய ஓனருக்கு அதிர்ச்சி! -கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளையன் - சென்னையில் பட்ட பகலில் பயங்கரம் | பரபரப்பு சிசிடிவி காட்சி
சென்னையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை அடித்துவிட்டு, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தப்பிச் சென்ற மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முருகன், சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு சரோஜா அதிர்ச்சியடைந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த மர்மநபர், திடீரென ஓடி வந்து சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் 3 சவரன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்றதும் தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.