நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை, உச்சநீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.
நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாகக் கூறி, சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யவும் கோரி சவுக்கு சங்கர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிறுத்தி வைத்த சிறை தண்டனை உத்தரவை மேலும் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. மேலும், ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.