கருணை உருவமான தெய்வானையா 2 உயிரை எடுத்தாள்? - குற்றவுணர்ச்சியில் விட்ட கண்ணீரே சாட்சி

Update: 2024-11-19 07:03 GMT

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், கோயில் யானையான தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த சோகத்துக்கிடையே, தெய்வானையின் பின் கதை குறித்து மனம் திறந்திருக்கின்றனர் அப்பகுதி மக்கள். பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

சாமிக்கு முன் கம்பீரமாய் ரத வீதிகளில் வலம் வந்த பெண் யானை தெய்வானை தாக்கியதில், யானை பாகன் உட்பட இருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

தெய்வானை என்கிற இந்த யானையின் முதல் பெயர் பிரிரோனோ என்கின்றனர்..

கடந்த 2006 இல் திருச்செந்தூர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த யானை பின்நாளில் தெய்வானையாக மாறியிருக்கிறது..

தெய்வானை வந்தபோது அவருக்கு 6 வயதாம்.. அப்போது 3 வயதில் குமரன் என்ற யானையும் சேர்ந்து கொண்டு வரப்பட்டதெனவும், பின்நாளில் காலில் உண்டான காயத்தால் குமரன் இறந்து விட்டதாகவும் கூறுகின்றனர்..

தெய்வானையின் கால் மாட்டில் என் பேரனை நிற்க வைத்து படம் பிடித்த நான், தற்போது பழம் கொடுக்க வந்த இருவரை தெய்வானை தாக்கியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறுகிறார்..

பாகன் இறந்ததை அறியாத தெய்வானை, அவரை காணாமல் கண்ணீர் விட்டதாகவும், அரை மணி நேரம் சாப்பிடவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்..

இந்த விபரீத சம்பவம் மனதை கலங்கடித்திருக்கும் நிலையில், மாவட்ட வன அலுவலர் தலைமையிலான மருத்துவக்குழு தெய்வானையை மருத்துவ பரிசோதனை செய்ய இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்