இது வரை 1 கோடியே 60 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த பிரபல யாசகர்

Update: 2024-11-19 07:16 GMT

கடலூர் மாவட்டத்தில் பிரபல யாசகர் பூல்பாண்டி, யாசகம் மூலம் தனக்கு கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இவர், பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக அளித்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார். இதுவரை யாசகர் பூல்பாண்டி, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்