சந்திரயான்-3 லேட்டஸ்ட் அப்டேட்... 4ஆம் கண்டத்தை தாண்டியது - உயர பறக்கும் இந்திய கொடி..!

Update: 2023-07-21 03:49 GMT

நிலவின் தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக கடந்த 14ம் தேதி அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான்-3

கடந்த சில நாட்களுக்கு முன்பாக.... முதல் மூன்று சுற்று பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது நான்காவது சுற்று பாதைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது, சந்திரயான் - 3. இதன் மூலம் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொடர்ந்து நீள் வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி... நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட இருக்கிறது, சந்திரயான்-3 விண்கலம்.

இந்த சுற்றுப்பாதையானது அடுத்த கட்டமாக 25-ம் தேதி மேலும் உயர்த்தப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு 5 முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்பட்டு, நிலவை நோக்கி தனது பயணத்தை சந்திரயான்-3 தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்