நிலத்தில் கொட்டப்பட்ட எல்லையில்லா அன்பு..! 2500 கிலோ அரிசியில் உருவான சோனுசூட் உருவம் நெகிழ்ச்சி வீடியோ
கொரோனா காலகட்டத்தில் நிறைய உதவிகளை செய்ததால்,ரியல் ஹீரோ என கொண்டாடப்படும் நடிகர் சோனு சூட், அதற்கு பின்னரும் பல உதவிகளை செய்து வருகிறார். அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை தெரிவிக்கும் விதமாக மத்திய பிரதேசம் மாநிலம் தேவாஸ்-ல், ஒரு ஏக்கர் நிலத்தில் 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சோனு சூட் உருவத்தை ரசிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வரைந்துள்ளனர். இதனால் மிகவும் நெகிழ்ந்து போன சோனு சூட் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தேவையில்லாத வேலை என சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வரும் நிலையில், இந்த அரிசி முழுவதும் ஏழ்நிலையில் உள்ள பல குடும்பங்களுக்கு NGO மூலம் அனுப்பிவைக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.