அதிமுக எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக

Update: 2023-04-13 08:06 GMT

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், தமிழர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், கூட்டணியில் களமிறங்கும் அ.தி.மு.க.வின் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க, பாஜக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என கர்நாடக அதிமுக நிர்வாகிகள் பலர் கருதி வந்தனர். தமிழர்கள் அதிகம் வாழும் 8 தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் குரலெழுந்தது. இதுவரை கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகாத நிலையில், 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதனால், பாஜகவுடன் கூட்டணியில் களமிறங்கும் கர்நாடக அதிமுகவின் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. கூட்டணி இல்லாத நிலையிலும், அ.தி.மு.க தனித்துப் போட்டியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதால், சில தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், இத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாத சூழல் உருவாகும். தேர்தல் குறித்த நிலைப்பாட்டை ஈபி.எஸ். கூறாத நிலையில், ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்