சட்டமன்றத் தேர்தல்களுக்கு தயாராகும் பாஜக... பிரதமர் மோடி கூறிய முக்கிய தகவல்

Update: 2023-05-29 00:32 GMT

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில ஆளும் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து, 9 ஆண்டு சாதனைகள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக, மே 30-ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்