பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்த வேன்.. ICU-வில் துடிதுடிக்கும் 15 உயிர்.. விழுப்புரத்தில் பரபரப்பு
ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்தில் சிக்கி 15 பேர் படு காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று, சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேனில் 20 பேர் பயணித்த நிலையில், 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளானவர்கள், திருவள்ளூரை சேர்ந்த வேடல் கிராமத்தினர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்லவிருந்த நிலையில் விபத்தில் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.