பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு
- சேலம் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை தினந்தோறும் விசாரித்து, 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
- இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரி ஆடிட்டர் ரமேஷின் தாய் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
- இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, விசாணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.