தபால் மூலம் ஐயப்பன் கோயில் பிரசாதம் பார்சல் - பிரசாதம் மூலமாக ரூ. 1.34 லட்சம் வருவாய்

Update: 2022-12-06 12:51 GMT

சபரிமலையில் இருந்து தபால் மூலம் பிரசாதம் பார்சல் அனுப்பியதில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு, மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, சபரிமலை தபால் நிலையமும், கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. சபரிமலை பிரசாதத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, தபால் நிலையம் மூலமாக பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்