"தற்கொலை வழக்காக மாற்ற முயற்சி" - சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையே இல்லை - ஸ்ரீமதியின் தாய் பேட்டி

Update: 2022-10-14 14:29 GMT

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில், சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், நீதிமன்ற கண்காணிப்பில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்காட வந்த மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனை, ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், இந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக, தற்கொலை என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபுவை சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்