முதியோர்களிடம் தொடர்ந்து கைவரிசை தம்பதி கைது - சிறையில் அடைப்பு

Update: 2022-10-21 02:52 GMT

முதியோர்களிடம் தொடர்ந்து கைவரிசை தம்பதி கைது - சிறையில் அடைப்பு

கன்னியாகுமரியில், பேருந்து நிலையங்களில் நிற்கும் வயதான முதியோர்களை ஏமாற்றி, நகை, பணத்தை பறித்துச் சென்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். வயதான தம்பதியிடம் கும்பல் ஒன்று கைவரிசை காட்டுவதாக, போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில், சந்தேகப்படும்படியாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த கணவன் மனைவியான சித்ரவேல் - பார்வதி என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்