தலைவருடன் செல்ஃபி எடுத்த அபர்ணா பாலமுரளி... டக்டக்குனு இணையத்தில் ஷேர் ஆகும் புகைப்படம்
நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா, சமூக ஊடகங்களில் அதிகம் ஆக்டிவாக இல்லாவிட்டாலும், அவர் அவ்வப்போது வெளியிடும் பதிவுகள் கவனத்தை ஈர்க்கின்றன. தற்போது, விமான பயணத்தின்போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அதற்கு "ரசிகையின் தருணம்" என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.