பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை, வரும் 28-ந் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன் , முதலில் ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி கிராம பகுதியில் 2 சட்டமன்ற தொகுதியிலும், நகரில் 4 சட்டமன்ற தொகுதியிலும் யாத்திரை செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை 23-ந் தேதி தமிழகம் முழுவதும் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பாஜக சார்பாக போராட்டம் நடைபெறும் எனவும் கரு.நாகராஜன் கூறினார்.