உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் துணிவு படம் புரமோசன் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் - அஜித்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், படத்தை விளம்பரம் செய்வதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி சர்வதேச அளவில் பிரபல இடங்களான துபாயின் புர்ஜ் கலிஃபா(BURJ KHALIFA) மற்றும் நியூயார்க் TIMES SQUARE பகுதிகளில் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.