அதிமுக பொதுக்குழு வழக்கு - இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, கடைசியாக மூன்றாவது நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், விசாரணை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து உத்தரவிட்டனர். அதன்படி, அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு அதிமுக எதிர்காலத்தினை தீர்மானிக்கும் வழக்கு என்பதால், அரசியல் வட்டாரத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.