பொதுச்செயலாளர் ஆன பின் மனைவியுடன் சொந்த ஊருக்கு விசிட் அடித்த ஈபிஎஸ் - ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு. அவரது சொந்த கிராமத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் முதன் முறையாக தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கே அவருக்கு ஊர்மக்கள் ஆரத்தி எடுத்தும், மேலதாளங்களுடனும், உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து ஊரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழா நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் ஈபிஎஸ் கலந்து கொண்டார்.