நடிகர் அர்ணவுக்கு சம்மன் அனுப்பிய போலீசார்
சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ் வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சின்னத்திரை நடிகர் அர்ணவை திருமணம் செய்து கொண்ட நடிகை திவ்யா, தன் கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை
முன்வைத்து வருகிறார். வேறொரு நடிகையுடன் தன் கணவருக்கு தொடர்பு, கர்ப்பிணியான தன்னை தாக்கினார் என அடுக்கடுக்கான
குற்றச்சாட்டுகளை திவ்யா முன்வைத்திருக்கும் நிலையில் போலீசார் அர்ணவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே இவர்கள் இருவரும் மாறி மாறி ஆடியோக்களை வெளியிட்டு வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில்
வழக்கு விசாரணைக்காக அர்ணவ் வரும் 14ஆம் தேதி ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி
உள்ளனர். அர்ணவ் ஆஜரான பின்னர் இந்த வழக்கு அடுத்த முக்கிய நகர்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.