சபரிமலையில் பெண்கள், குழந்தைகளுக்கு தனித் தனி வரிசை ஏற்படுத்தப்பட இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, கேரள மாநில டிஜிபி அனில் காந்த் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தனித் தனி வரிசை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் நிமிடத்திற்கு 80 பக்தர்கள், 18ம் படி ஏறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.