"வருடத்திற்கு 18 லட்சமா...?" தேனீ மனிதனின் கலக்கல் சாதனை - தொழிலில் உச்சம் தொட்டு அசத்தல்
தேனீக்கள் கொட்டும் என்ற அச்சத்தை போக்கி தொழில் ரீதியாக உச்சத்தை தொட்டு அசத்தி வருகிறார் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்
தேன் என்றால் விருப்பு...தேனீக்கள் என்றால் வெறுப்பு என்பது தான் நிதர்சனம்... காரணம் பக்கத்தில் சென்றாலே கொட்டி விடுமோ என்ற பயம்... ஆனால் இந்த எண்ணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் நெல்லை மாவட்டம் மலையடிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் இசக்கி முத்து... தேனீக்கள் மீதான அச்சத்தைப் போக்க தனது முகம் முழுவதும் தேனீக்களை பரவ விட்டு விநோத விழிப்புணர்வு ஏற்படுத்தும் இசக்கி முத்து, தேன் உற்பத்தி தொழிலில் வருடத்திற்கு 18 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்... விவசாயத்தில் பட்டயப் படிப்பு முடித்த இசக்கி முத்துவின் தொழிலுக்கு உறுதுணை தேனீக்களும், இவரது குடும்பத்தினரும்... அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதத்தில் 2 நாட்கள் தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவசமாக பயிற்சி நடத்தும் இசக்கி முத்து, இன்றைய இளைஞர்களையும் தேன் உற்பத்தி தொழிலில் ஈடுபட ஊக்குவித்து வருகிறார்...