இந்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள், மும்பை மற்றும் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை போட்டி தொடர், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக, ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள், மும்பையின் வான்கடே மைதானத்திலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறும் எனவும், இறுதி போட்டி அகமாதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரையிறுதி போட்டிகள் நவம்பர் 15, 16 ஆம் தேதிகளிலும், இறுதி போட்டி நவம்பர் 19 ஆம் தேதியும் நடைபெறும் என தகவல்கள் கூறுகின்றன.