நாடே உறைந்த ஒரு ரயில் விபத்து.. "கொஞ்சம் கூட கவலையில்லை.." முரசொலி குற்றச்சாட்டு
Card-1 வெளிநாடு முதலீடு குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை கண்டித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில், Card-2 கோரமண்டல் ரயில் விபத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்த நேரத்தில், ஆளுநர் ரவி உதகைக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Card-3 ரயில் விபத்தில் தமிழ்நாட்டுப் பயணிகள் நிலை என்ன என்பது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. Card-4 மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து Card-5 துணை வேந்தர்களுக்கு சம்பந்தமில்லாத தொழில் முதலீடுகளை பற்றி பேசியிருப்பது, ஆளுநரின் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. Card-6 சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவதாகவும், Card-7 மீண்டும் நினைவுப்படுத்துகிறோம் தமிழ்நாட்டில் நடப்பது மு.க.ஸ்டாலின் ஆட்சி என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.