கடத்தல் கும்பலை தடுத்து நிறுத்திய இளைஞர்களை தாக்கியதால் பரபரப்பு - போலீஸ் கண் முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்
கனிம வளங்களை கடத்திச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய இளைஞர்கள் மீது, போலீசார் கண் முன்னே தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மேற்கு தொடர்ச்சி மலைகளை உடைத்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல், போலீசார் கண் முன்னே இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனிடையே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், கடத்தல் வாகனங்களை தடுக்க முன்வராமல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.